RBI யின் நான்காவது துணை ஆளுநராக T ரபி சங்கர் பொறுப்பேற்பு!

Update: 2021-05-03 02:00 GMT

மத்திய வங்கியின் நான்காவது துணை ஆளுநராக ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியாவின்(RBI) நிர்வாக இயக்குநர் T ரபி சங்கர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 ரபி சங்கர் RBI யின் பின்டெக், பணம் செலுத்தும் முறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இடர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் பொறுப்பாளராக உள்ளார். இவர் B P கானுங்கோ துணை ஆளுநராகத் தனது பதவியில் ஒருவருட நீடிப்புக்குப் பிறகு ஏப்ரல் 2 இல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளார்.

ரபி சங்கர் பொருளாதாரத்தில் M Phil முடித்துள்ளார் மற்றும் RBI யின் கடன் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து முக்கியமான துறைகளிலும் பணியாற்றியுள்ளார். ரபி சங்கர் பொருளாதார வல்லுநர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவராக மதிக்கப்படுகிறார். இவர் BIS உட்பட இரண்டு முக்கிய துவம் வாய்ந்த குழு உட்பட பல்வேறு குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.

இவர் 2005-11 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதி ஆலோசகர் மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும் 2008 முதல் 2014 கால பகுதியில் நிதி அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார்.



இவர் RBI யில் பணியாற்றியதைத் தவிர, RBI துணை நிறுவனமான இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்(IFTAS) இல் தலைவராக 2020 ஜூன் இல் நியமிக்கப்பட்டார்.



source: https://www.business-standard.com/article/finance/t-rabi-sankar-named-rbi-deputy-governor-to-succeed-b-p-kanungo-121050101001_1.html

Similar News