இந்தியாவில் கிரிப்டோகரன்சி முற்றிலும் தடை செய்ய வேண்டும்: RSS சங்கம் வேண்டுகோள்!

இந்தியாவில் முற்றிலும் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய RSS தற்போது வேண்டுகோளை விடுத்துள்ளது.

Update: 2021-12-27 13:19 GMT

கிரிப்டோகரன்சி கள் இந்தியாவில் பெருமளவில் பேசுபருளாக மாறியுள்ளது. காரணம் பெருமளவிலான இந்தியர்கள் கிரிப்டோகரன்சிகளில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதுதான். மேலும் இத்தகைய நடவடிக்கைகளை தடை செய்வதற்காக ரிசர்வ் வங்கியும் மற்றும் மத்திய அரசும் இணைந்து டிஜிட்டல் கரன்சிகளை உருவாக்கும் என்று முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும் தற்பொழுது RSS- உடன் இணைந்த மற்றும் செல்வாக்கு பெற்ற அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச், இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் கிரிப்டோகரன்சிகளை வாங்குவது, விற்பது, முதலீடு செய்வது மற்றும் வேறுவிதமாக கையாள்வதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. 


இந்தியாவில் முழுவதுமாக கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய வேண்டும். மேலும் மக்கள் கிரிப்டோகரன்சி களை வாங்குவது, விற்பதை சட்டப்படி குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் இதற்கான ஒரு தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிப்டோகரன்சியை அங்கீகரிப்பது பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதிக்கு வழிவகுக்கும் என்று தீர்மானம் கூறியது. இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி வழங்குவது தொடர்பான சட்டத்தை விரைவாக உருவாக்க வேண்டும் என்று SJM குறிப்பிட்டது. 


"Bitcoin, Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகள் ஒரு சொத்தாக அல்லது டிஜிட்டல் சொத்தாக அங்கீகரிக்கப்படக்கூடாது. ஏனெனில் அது மறைமுகமாக நாணயம் போன்ற பரிமாற்ற ஊடகமாக மாறும்" என்று அமைப்பு மேலும் கூறியது. கிரிப்டோகரன்சிகளை வைத்திருக்கும் நபர்கள், வருமான வரித் துறைக்கு தகவல்களைச் சமர்ப்பிக்கும் விதிமுறைக்கு உட்பட்டு, குறுகிய காலத்திற்குள் அதை விற்கவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படலாம் என்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு கூறியுள்ளது.

Input & Image courtesy: India Today



Tags:    

Similar News