ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியா தான் முதலிடம்.

Update: 2022-09-03 02:50 GMT

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக பல்வேறு நாடுகளின் வர்த்தக உறவுகள் மாறி இருக்கின்றன. குறிப்பாக இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகமான வர்த்த கூரவை வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சமீப காலமாக அமெரிக்காவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைந்து வருகின்றது. அதற்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் முதலிடத்தில் தற்போது உள்ளது. மேலும் முதலிடத்தில் இருந்த சீனாவின் உறவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.


இது பற்றி ரஷ்யா ESPO கூறுகையில், "ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்களை வாங்கும் நாடுகளில் இந்தியா தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகின்றது. மேலும் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்படும் நான்கில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு செல்வதாகவும் தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது. மேலும் வரும் காலங்களில் இந்திய ரஷ்ய இதுபோன்ற வர்த்தகத்தின் ஈடுபட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.


ஆறு கச்சா எண்ணெய்கள் நிறைந்த கப்பல் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. இதுதான் இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும்மான மிகப்பெரிய வர்த்தகமாகவும் கருதப்படுகின்றது மற்றும் உலக நாடுகள் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளாத வரை இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் நாங்கள் கச்சா எண்ணெய்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ரஷ்ய தரப்பில் இருந்து தற்போது தெரிவிக்கப் பட்டுள்ளது.

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News