இந்திய-ரஷ்ய நட்புறவின் தெளிவான விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்!
தற்போது போருக்கு மத்தியில் இந்திய அரசை நட்புறவு பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்தார் நிர்மலா சீதாராமன் அவர்கள்.
உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில் இந்தியா ரஷ்யா உடனான தனது உறவை இன்னும் சுமுகமான நிகழ்ச்சியில் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வது குறித்து பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு எதிராகவும் செயல்படுகின்றன. போருக்கு மத்தியிலும் கூட இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்வதற்கான காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளும் முன்வைக்கப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த வாஷிங்டன் மற்றும் டெல்லியில் குறித்த கருத்தரங்கில் இதுபற்றி நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகையில், உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று வழியை கண்டறிந்து வருவதாக கூறியுள்ளார்.
போருக்கு மத்தியிலும் கூட சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இதுபற்றி கூறுகையில், இந்தியா எப்போதும் நடுநிலையாக இருந்து வருவதாகவும் யாருக்கும் சாதகமாக இல்லாமல் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து அமைந்துள்ளது.
"உங்கள் நண்பரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது" என்று ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு குறித்து எடுத்துரைத்தார். ரஷ்யாவில் இருந்து 4% மட்டுமே கச்சா எண்னெய் இறக்குமதி செய்வதாகவும், பெரும்பலான எரிபொருள் தேவை மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்தே இருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே ரஷ்யாவுடனான இறக்குமதியை பல்வேறு நாடுகள் திரும்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Input & Image courtesy: Thanthi News