SDRF கீழ் முதல் தவணை நிதி 8873.6 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வெளியீடு!

Update: 2021-05-01 11:01 GMT

சனிக்கிழமை அன்று மாநிலங்களுக்கு 2021-22 ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின்(SDRF) முதல் தவணையின் மத்திய பங்கு 8873.6 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த நிதியின் 50 சதவீதம் அதாவது 4436.8 கோடியை மாநிலங்களின் கொரோனா தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அமைச்சகம் அதில் தெரிவித்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கு 8873.6 கோடி வழங்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது. பொதுவாக நிதியமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் SDRF யின் முதல் தவணை நிதி ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.

மேலும் இது, "SDRF நிதி முன்னரே வெளியிட்டது மட்டுமல்லாமல், கடந்த நிதி ஆண்டில் வெளியிட்ட நிதியின் பயன்பாட்டுக்கான சான்றிதழுக்காகக் காத்திருக்காமல் இந்த தொகை தற்போது வெளியிடப்பட்டுள்ளது," என்று நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த SDRF நிதியை மாநிலங்கள் பல்வேறு நடைமுறைகளுக்கும் பயன்படுத்தலாம். இதனை ஆக்சிஜென் பயன்பாட்டுக்கான கட்டணத்துக்கு, வென்டிலேட்டர்ஸ், ஏர் ப்யூரிஃயேர், ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துதல், கொரோனா மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையம், தெர்மல் ஸ்கேன்னர்ஸ், பாதுகாப்பு கருவிகள், சோதனை ஆய்வகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும்.

source: https://economictimes.indiatimes.com/news/india/centre-releases-first-instalment-of-rs-8873-6-crore-under-state-disaster-response-fund-to-states/articleshow/82339109.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral

Similar News