வீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம்: தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்குமா?
தமிழகத்தில் புதிதாக பட்ஜெட்டில், தற்பொழுது வீணாகும் காய்கறிகளை கொண்டு உரம் தயாரிக்கும் திட்டம்- விவசாயிகளுக்கு கை கொடுக்குமா? என்பது பற்றி ஒரு பார்வை.
தமிழகத்தில் அதிகமான மக்கள் காய்கறிகளை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் உபயோகப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக தினமும் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் குறைவதற்கு இடமில்லை. இருந்தாலும் ஒரு நாளைக்கு சுமார் 1000 கிலோ காய்கறிகள் தமிழகத்தில் மட்டும் வீணாகிறது. இதனை கருத்தில் கொண்டு வீணாகும் காய்கறிகளை உரம் தயாரிக்கும் திட்டத்தை தற்போது தமிழக அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் திட்டமாக இது இருக்குமா? என்பது பற்றி ஒரு சில பார்வைகள்.
பட்ஜெட் தாக்கலின் போது வெளியான அறிவிப்பில், 25 உழவர் சந்தைகளில் 2.75 கோடி ரூபாயில் உரங்கள் தயாரிக்கும் விதமாக கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீணாகும் காய்கறிகளை வீணாக குப்பைகளில் வீசி எறியாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் உரங்களாக மாறும். இதனால் அங்குள்ள சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கும், உரமும் தயாரிக்க முடியும். மொத்தத்தில் இது வரவேற்க தக்க நல்ல விஷயம்தான் என்று வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உழவர் சந்தைகள் மூலம் தினசரி சுமார் 2000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் சுமார் 8000 விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விவசாய துறைக்கு தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் வீணாகும் காய்கறிகள் உரமாக்கப்பட்டு மீண்டும், உரமாக விவசாயித்திற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.திட்டத்தை முழுமையாக செயல்பாட்டில் கொண்டு வந்தால் மட்டும், தான் அதன் முடிவை உறுதியாக கூற முடியும்.
Input: https:// goodreturns.in/news
Image courtesy:wikipedia