சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு: மத்திய அரசின் அறிவிப்பு !
இந்தியாவில் தற்போது சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. சர்வதேச சந்தை விலை உயர்வால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரியளவில் உயர்ந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் தற்போது விலை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசலை போல் சமையல் எண்ணெய் மீதும் அதிகப்படியான வரியை விதித்து இருந்ததும் பல்வேறு தரப்பு மக்களையும் பதற்றத்திற்கு உள்ளாகி இருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்பொழுது மத்திய அரசு புதிய முறையை கையாண்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது போல் தற்போது சமையல் எண்ணெய் மீதான வரியையும் குறைத்துள்ளது. சமையல் எண்ணெய் மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீது இருந்த 2.5 சதவீத வரியை 0 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதேபோல் சமையல் எண்ணெய் மீது இருந்து அக்ரி செஸ் 20 சதவீதத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத பாமாயில்-க்கு 7.56 சதவீதமும், சோயாபீன் மற்றும் சன்பிளவர் ஆயில்-க்கு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
வரிக் குறைப்பு இதன் தற்போது சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீது மொத்தமாகவே 7.5 சதவீத வரி மட்டுமே உள்ளது. இதேபோல் சுத்திகரிக்கப்படாத சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீது 5 சதவீத வரி மட்டுமே உள்ளது. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் மீதான வரித் தற்போது இருக்கும் 32.5 சதவீத வரியை 17.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
Input & Image courtesy:Times of India