பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பெறுவது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் பயன் அடையும் பயனாளிகள் தகுதிகள் என்னென்ன?
இந்த வருடத்திற்குள் குறிப்பாக 2022-க்குள் அனைத்து பயனாளிகளுக்கும் நிரந்தர வீடு வழங்குவதற்கு முக்கிய நோக்கமாக 2015ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்புறம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சொந்த வீட்டில் மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு காரணத்திற்காகவும் இந்த வீடு வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன கிராமப்புறங்களில் எவ்வாறு பயனாளிகளுக்கு இது உதவுகின்றது? என்பதை தற்போது பார்க்கலாம்.
மற்றொன்று PMAY-G எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சொந்த வீடுகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது. மலிவான விலையில் எளிய கடன் வசதியில் தனிநபருக்கான வீடு வழங்கும் திட்டம் தான் இது. PMAY-U கொடுத்த விவரங்களின் படி, இந்த திட்டத்தின் கீழ் 1.21 கோடி வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 58.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தை மூன்று வகைகளாக பிரித்து தானாகவே வீடு கட்டிக் கொள்ளவும், அரசின் உதவியுடன் கட்டுவோர் மற்றும் கடன் தொகையுடன் வீடுகளை கட்டுவது என்று மூன்று வகையாகப் பிரித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தில் பயனடையும் பயனாளிகளுக்கு இந்தியாவில் இதுவரை அவர்களுடைய பெயரில் எந்த ஒரு சொத்தும் அல்லது அசையா சொத்துக்களும் இருக்கக் கூடாது என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது. மேலும் அந்த வீட்டில் உள்ள நபர்கள் நான்கு பெயர் வரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் எந்த ஒரு சொத்தும் பதிந்து இருக்கக்கூடாது என்பதுதான் இதிலுள்ள முக்கிய அம்சம்.
Input & Image courtesy:Indian Express