டிஜிட்டல் இந்திய பொருளாதாரத்தின் புதிய மாற்றம்: டெவலப்பர்களின் பங்கு மகத்தானது.!
டிஜிட்டல் இந்தியா பொருளாதாரத்தின் புதிய மாற்றத்திற்கு ஆப் டெவலப்பர்களின் முக்கியப் பங்கு மகத்தானது.
தற்பொழுது இந்திய பொருளாதாரம் முற்றிலுமாக டிஜிட்டல் மையத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. காரணம் நாம் காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை நாம் டிஜிட்டலில் ஒவ்வொரு வேலைகளையும் செய்கிறோம். அது சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி. ஒரு தனிநபரின் இத்தகைய டிஜிட்டல் பயன்பாடு பொருளாதாரத்தின் வளர்ச்சி முற்றிலுமாக மாற்றமா? என்று நீங்கள் கேட்டால் நிச்சயம், ஆம்! என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் தனிநபராக உயர்த்தப்படும் ஒவ்வொருவரும் ஒட்டுமொத்தமாக பொருளாதார வளர்ச்சிக்கு வித்து இடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே இத்தகைய டிஜிட்டல் மயம் அதற்குப்பின்னால் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ள டெவலப்பர்கள் வேலை செய்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆம், நிச்சயம் நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு ஆப்பிலும் அல்லது வெப்சைட் போன்றவற்றிலும் பல்வேறு மாற்றங்களை அவர்கள் தான் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு டெவலப்பர்கள் தங்களுடைய இந்த தொழில் நுட்பத்தை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற நிறுவனங்களிடம் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக டெவலப்பர்கள் இருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா அறியப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம், உலகளவில் 99% டெவலப்பர்கள் டிஜிட்டல் பொருட்கள் மற்றும் சேவைகளை பிளே ஸ்டோரில் விற்கிறார்கள். எனவே டெவலப்பர்கள் சமூகத்தை நாம் தொடர்ந்து ஆதரித்து வேண்டுமானால், புதுமைகள் திறந்த மூலத்தின் தாக்கத்தை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. ஒரு தேசமாக, நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். திறமைகளை ஊக்குவிக்க வேண்டும், சிறந்த பயிற்சி மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Input & Image courtesy: Business Today