₹. 1,305 கோடி செலவில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் - எங்கே தெரியுமா?

1,305 கோடி செலவில் குஜராத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் முதல் கட்டத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2022-06-16 01:40 GMT

₹  1,305 கோடி செலவில் குஜராத்தில் உள்ள தோலேராவில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் முதல் கட்டத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தோலேரா விமான நிலையத்தின் ரெண்டர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அறிவித்து இருந்தது. குஜராத்தில் உள்ள தோலேராவில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் முதல் கட்டத்தை 1,305 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுக்காக ஒப்புதல் தற்போது அளித்துள்ளது. இது 48 மாதங்களுக்குள் முடிக்கப்படும். 


இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), குஜராத் அரசு மற்றும் நேஷனல் இன்டஸ்ட்ரியல் காரிடார் டெவலப்மென்ட் அண்ட் இம்ப்ளிமென்டேஷன் டிரஸ்ட் (NICDIT) ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு நிறுவனமான தோலேரா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் கம்பெனி லிமிடெட் (DIACL) மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மூன்று நிறுவனத்தின் பங்குகள் சுமார் 51:33:16 என்ற விகிதத்தில் இருக்கும். தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதியிலிருந்து பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் இது தொழில்துறை பகுதிக்கு சேவை செய்வதற்கான முக்கிய சரக்கு மையமாக மாறும் என்று CCEA வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் அருகிலுள்ள பிராந்தியத்திற்கும் சேவை செய்யும் மற்றும் அகமதாபாத்திற்கு இரண்டாவது விமான நிலையமாக செயல்படும். தோலேராவில் உள்ள புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 2025-26 ஆம் ஆண்டு முதல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஆரம்பகால பயணிகள் போக்குவரத்து ஆண்டுக்கு 3 லட்சம் பயணிகளாக இருக்கும் என்றும், 20 ஆண்டுகளில் 23 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Input & Image courtesy: Swarajya News

Tags:    

Similar News