இந்தியாவின் டிஜிட்டல் UPI மற்றொரு சாதனை: 124 கோடி பரிவர்த்தனை என்ற புதிய மைல்கல்லை எட்டியது
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள பண பரிமாற்றத்திற்கான UPI சேவை 124 கோடி பரிவர்த்தனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள UPI என்ற தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளை காட்டிலும் தற்போது புதியதாக சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெவ்வேறு வங்கி கணக்குகளை அணுகுவதற்காக செல்போன் செயலிகளை பயன்படுத்தும் போது 24 மணி நேரமும் மற்றும் 365 நாட்களிலும் இந்த சாதனை உடனடி பண பரிமாற்றத்தை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. UPI என்ற செயலியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளில் எண்ணிக்கை 124 கோடி ஆக இருந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா லாக்டவுன் போன்ற காரணங்களால் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முற்றிலும் இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட UPI எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்ற வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு ஆணையத்தால் (NPCI) உருவாக்கப்பட்டதாகும். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் கீழ் இணைக்கும் அமைப்பாகும்.
சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் இந்த யூபிஐ பரிவர்த்தனை தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்து வருகிறது. 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த போது, யூபிஐ மூலமாக ரூ.2.06 லட்சம் கோடி மதிப்பிலான 124 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18