வரும் மாதங்களில் இந்திய பொருளாதாரம் வலுவான மீட்பை காணும்!
2022-ல் வருகிற மாதங்களில் இந்திய பொருளாதாரம் வலுவான மீட்பு நடவடிக்கைகளை காண இருக்கிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தொற்று நோயின் தாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரம் தன் அடைய வேண்டிய இலக்கை சற்று பின்தங்கி உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நடப்பு நிதியாண்டில் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இந்திய பொருளாதாரம் 9 சதவீதமாக வளர இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு, நோய் தொற்று பாதிப்பு போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் சாதனை படைக்க இருக்கிறது.
இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மக்கள் தற்பொழுது பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தற்பொழுது உருமாறி இருக்கும் ஓமிக்ரான் வைரஸ்களை எதிர்கொள்வார்கள். இந்திய பொருளாதாரத்தில் ஏற்றுமதிப் பொருட்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது பொருளாதாரத்தில் கணிசமான மீட்பு நடவடிக்கை ஆகத்தான் காணப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மே 2020 முதல் ரெப்போ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது. மற்றவற்றுடன், குறைந்த வட்டி விகிதங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளித்துள்ளன. மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கும், கிராமங்களில் முன்னேற்றத்திற்கும் தேவையான நடவடிக்கைகளையும் இந்த ஆண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Input & Image courtesy:Business standard