தேசியக் கட்சி மாதிரியா நடந்துக்கிறாங்க..? 19 வயது சிறுவனின் இறுதி ஊர்வல புகைப்படத்தை, அரசுக்கு எதிரான போராட்டமாக சித்தரித்த காங்கிரஸ்!

Congress uses 2010 image from Kashmir protests to claim youth are unemployed under Modi government

Update: 2022-01-14 00:45 GMT

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், மத்திய அரசால் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, ஜனவரி 12 அன்று, காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது.



காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், "அன்புள்ள பாஜக, நீங்கள் சிலரை எப்போதும் முட்டாளாக்கலாம். எல்லா மக்களையும் சில சமயம் ஏமாற்றலாம். ஆனால் எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இளைஞர்களை நீங்கள் ஒருபோதும் ஏமாற்ற முடியாது. இந்த #தேசிய இளைஞர் தினத்தில், #பாஜகவை தோற்கடிக்க நமது இளைஞர்கள் தீர்மானித்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் வேலையற்ற இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட படம், நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




 


அந்த புகைப்படம் மோடி அரசாங்கத்தின் கீழ் உருவான 'வேலையற்ற இளைஞர்கள்' அல்ல. அது ஜம்மு காஷ்மீரில் 19 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தின் போது சில எதிர்ப்பாளர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபோது எடுக்கப்பட்டது. அதுவும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் படி, பட இணையதளமான அலமியில் இந்த படம் கிடைத்தது.

ஜனவரி 9ஆம் தேதி, மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசுகளின் திட்டங்களை காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது போன்ற பல பதிவுகள் பதிவாகியுள்ளன.





Tags:    

Similar News