#FactCheck கோவை ஈஷா மையத்தில் யானை இறந்ததாக போலி செய்தி பரப்பும் முன்னாள் பத்திரிகையாளர் - உண்மை என்ன?

#FactCheck கோவை ஈஷா மையத்தில் யானை இறந்ததாக போலி செய்தி பரப்பும் முன்னாள் பத்திரிகையாளர் - உண்மை என்ன?

Update: 2021-01-05 18:24 GMT
கோவையில் அமைந்துள்ள ஈஷாவின் நற்பெயரை கெடுக்க  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், முன்னாள் பத்திரிக்கையாளர்களும் இந்நாள் பத்திரிக்கையாளர்களும் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. அப்படி ஒரு நிகழ்வாக சிவா என்ற நக்கீரன் பத்திரிக்கையை சேர்ந்த முன்னாள் நிருபர், ஈஷாவின் ஆதியோகி சிலைக்கு அருகே ஒரு இளம் ஆண் யானை சட்டவிரோதமான ஒரு மின்சார வேலியில் இறந்ததாக ட்விட்டரில் பதிவிட்டார்.

மூன்று நாட்கள் ஈஷாவின் வேலையாள் பணியாளர்கள் இதை துரத்தி அடித்ததாகவும், இதன்பிறகு துரை என்பவரின் விவசாய நிலத்தின் அருகே இறந்து விட்டதாகவும் நான்கு புகைப்படங்களை பதிவிட்டு சில பத்திரிகையாளர்களின் பெயரையும் டேக் செய்திருந்தார்.

இச்செய்திக்கு பதில் அளித்து இருந்த பலரும் இது திரிக்கப்பட்ட செய்தி என உறுதிப்படுத்தினர். ஈஷா ஆதியோகி சிலைக்கு தொலைவில் அமைந்த ஒரு தனியார் நெல் வயலில் அருகே யானை இறந்து கிடந்ததாக பல செய்திகள் வந்துள்ள நிலையில் அதையும் ஈஷாவின் இணைத்து வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை வெளியிட்ட சிவா என்பவர் நக்கீரன் பத்திரிகையில் இருந்து வேலையை விட்டு நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து நக்கீரன் பெயரை பயன்படுத்தி வருவது குறித்து மறுப்பும், வழக்கும் பதியப்பட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி.

அதிகாரப்பூர்வமாக, ஈஷா அமைப்பு இதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது. தாங்கள், மின்சார வேலியை சரியாக விவசாயிகள் பயன்படுத்துவது எப்படி என்று வன அலுவலர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், விபரம் புரியாத விவசாயிகள் செய்யும் தவறுக்கு, ஈஷா மேல் பழிபோடுவது கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளனர்.

Similar News