வரிந்து கட்டிக்கொண்டு வதந்தி பரப்பும் ஊடகங்கள் - பழைய ரூ.5, ரூ10, ரூ.100 நோட்டுகள் வாபஸ்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

வரிந்து கட்டிக்கொண்டு வதந்தி பரப்பும் ஊடகங்கள் - பழைய ரூ.5, ரூ10, ரூ.100 நோட்டுகள் வாபஸ்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

Update: 2021-01-26 07:14 GMT

பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் கூறியதாக வதந்தி பரப்பிய ஊடகங்களின் செய்திக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகவும், இந்த முடிவு மங்களுரூவில் நடைபெற்ற மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் ஏற்கவில்லை என்றும், இது வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என ரிசர்வ் வங்கி பொது துணை மேலாளர் கூறியதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், பழைய 5,10,100 ரூபாய் நோட்டுகள் திரும்பபெறப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் முதல் பழைய 5,10,100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த தகவலில் உண்மை இல்லை என்று ரிசர்வ் வங்கி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

Similar News