NPCIL தேர்வு மும்பையில் மட்டுமா? உதயநிதி ஸ்டாலினின் அடுக்கடுக்கான பொய்கள்!

NPCIL தேர்வு மும்பையில் மட்டுமா? உதயநிதி ஸ்டாலினின் அடுக்கடுக்கான பொய்கள்!

Update: 2021-01-20 06:30 GMT

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL) கல்பாக்கத்தில் அருகே அமைந்துள்ள, மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் மையத்திற்கு ஸ்டைபண்ட் அடிப்படையில் வர்த்தக பயிற்சியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

 65 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் பிட்டர், வெல்டர்,எலக்ட்ரீசியன், ஒயர்மேன், டிராப்ட்ஸ்மேன் ஆகிய வேலைகளும் அடக்கம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜனவரி 11, 2021. 

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் ஜனவரி 18 அன்று ஒரு ட்வீட்டை வெளியிட்டு இந்த வர்த்தக பயிற்சியாளர்கள் தேர்வு மும்பையில் மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மும்பைக்கு இரண்டு முறை சென்று வர வேண்டும் என்று அறிந்தவுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் ஐஐடி டிப்ளமோ தகுதி தேவைப்படும் ஒரு வேலைக்கு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடைபெறுவது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த தேர்வுகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்தகைய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தி.மு.க இளைஞரணி செயலாளரின் இத்தகைய கூற்றுகள் பொய்களை தவிர வேறொன்றுமில்லை. முதலில் இந்த தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறுகிறது என்பது முழுக்கவே பொய்யான விஷயம். மும்பையில் இந்த தேர்வு நடை பெறுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. 

 NPCIL official notification for engaging Trade Apprentices at MAPS, Kalpakkam

 சொல்லப்போனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மும்பை என்ற வார்த்தை கூட எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. அறிவிப்பில், அருகில் இருக்கும் கிராமங்களில்  வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

 கடைசி முறை இதே போல ஒரு பயிற்சியாளர் திட்டம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இதில் எழுத்துப்பூர்வமான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் நடைபெற்றது.  எக்ஸிக்யூட்டிவ் பயிற்சியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு இந்தியாவின் பல நகரங்களில் நடக்கும் GATE பரீட்சை மூலம் வரை நடக்கிறது. தகுதி A மற்றும் B பதவிகளுக்கு கூட பரிட்சை தேர்வுகள் நாடு முழுவதும் நடக்கிறது. மும்பையில் மட்டும் அல்ல. எனவே உதயநிதி ஸ்டாலினின் கூற்றுகள் தவறானவை மற்றும் பொய்களாகும்.

Similar News