மத்திய அரசுப் பதவிகளில் லேட்டரல் நுழைவுத் திட்டம்: உடைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம்.!

மத்திய அரசுப் பதவிகளில் லேட்டரல் நுழைவுத் திட்டம்: உடைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம்.!

Update: 2021-02-10 09:28 GMT

மத்திய அரசு சமீபத்தில், கூட்டு செயலாளர்கள் (Joint Secretaries) மற்றும் இயக்குநர்கள் அளவில் தாமதமான (Lateral)  ஆட்சேர்ப்புக்கான திட்டத்தில் 30 பதவிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரத்தை அறிவித்துள்ளது.  UPSC விளம்பரத்தின்படி, மார்ச் 31 ஆம் தேதிக்குள் அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூன்று வருட காலத்திற்கு இருக்கும்.
 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் நிதி அமைச்சகங்களில் JS மட்டத்தில் லேட்டரல் நுழைவுகள் திறக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பதவிகளுக்கு, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், நிதி சேவைகள் துறை, பொருளாதார விவகாரங்கள் துறை , வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உயர் துறை, கல்வி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஆகியவற்றிற்கான பதவிகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
 

லேட்டரல் முறையில் கூட்டுச் செயலாளர்கள் பதவிக்கு 15 வருட அனுபவமும், இயக்குநர்கள் பதவிக்கு 10 வருட அனுபவமும் தேவைப்படும்.  இதைக் குறித்து சமாஜ்வாடி கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளன. இது குறித்து தினகரன் நாளிதழ் தன் தலையங்கத்தில்,

"மத்திய அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசின் முக்கிய இலாகாக்களை நிர்வகிக்கும் இணைச் செயலர்கள் பொறுப்பை தனியார் வசம் விட அரசு முடிவெடுத்துள்ளது. அப்பொறுப்பிற்கு கூட்டு செயலாளர்கள் என்ற முறையில் 30 பேரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் வெளியில் இருந்தும், தனியார் துறையில் இருந்தும் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும், சமூக நீதியையும் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க மத்திய அரசு முயல்கிறது.
 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப் பதவிகளில் இதுநாள் வரை மத்திய பணியாளர் தேர்வாணையம் சுதந்திரமாக செயல்பட்டு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து வந்தது. தற்போது அதை தவிர்த்து 30 பேரை தனியார் துறைகளில் இருந்து தேர்வு செய்து கூட்டு செயலாளர்களாக நியமித்தால் நிர்வாகம் என்னவாகும்?
 

அந்தப் பணியிடங்களுக்கு யாரை தேர்வு செய்வர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்வாணைய நியமனங்களில் பொதுவாக இட ஒதுக்கீடுகள் முறையாகப் பின்பற்றப்படும். ஆனால், மத்திய அரசின் புதிய திட்டப்படி அரசை நிர்வகிக்கும் அதிகாரிகள் பணியிடங்களும் தனியார்வசம் செல்லும். மொத்தம் 13 அமைச்சகங்களின் இணை செயலாளர் உள்பட 27 இயக்குனர்களுக்குரிய பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அரசுத் துறைகளின் உயர் பணியிடங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கை நீட்டும் நபர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பெற இயலும்.
 

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு முறைகள், நேர்காணல், குறிப்பிட்ட கால பயிற்சிகள் அனைத்துமே கேள்விக்குறியாகும். மத்திய அரசின் அனுக்கிரகம் கிடைத்தால் இணைச் செயலாளர் தொடங்கி, செயலாளர் வரை அனைத்துப் பதவிகளையும் அடைய வழிவகுக்கும்.
 

ஒவ்வொரு துறையிலும் சமூக நீதியை தீயிட்டுக் கொளுத்தி வரும் மத்திய அரசு, விரைவில் அதற்குரிய பலன்களை அனுபவித்தாக வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துகளை கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதே நல்லது"  
 

என்றெல்லாம் கட்டுக் கதைகளை அள்ளித் தெளித்துள்ளது. ஆனால் உண்மை என்ன? எதற்காக  பதவிகளுக்கு ஏற்கனவே இருக்கும் IAS அதிகாரிகளை விட்டு விட்டு தனியாக விளம்பரம் செய்ய வேண்டும்? சமூக நீதி மறுப்பா அல்லது வேண்டியவர்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையா? 

இரண்டும் இல்லை. மத்திய அரசு இந்த முறையை பின்பற்ற வேண்டியதன் அவசியமே, தேவையான IAS அதிகாரிகள் மத்திய அரசின் கைவசம் இல்லாத காரணம் தான். மாநில அரசுகள் தான் IAS அதிகாரிகளை வழங்க வேண்டும்.. ஆனால் அங்கேயே பற்றாக்குறை நிலவுவதால் இது சாத்தியமில்லாமல் போனது. 

இது குறித்து 2018ல் தி பிரிண்ட் செய்திகளில் வந்த தகவல்களின் படி, 

"நாடெங்கிலும் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கடுமையான பற்றாக்குறையின் சுமைகளை மத்திய அரசு தாங்க வேண்டியுள்ளது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தேவையான IAS அதிகாரிகளில் 34 சதவீத அதிகாரிகளை மட்டுமே கொண்டுள்ளது.

அதாவது மத்திய அரசு 1,417 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் தற்போது வரை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (டிஓபிடி) பதிவுகளின்படி. இது 486 அதிகாரிகளை மட்டுமே கொண்டுள்ளது. 

டிஓபிடி தரவுகளின்படி, நாடு சுமார் 1,449 ஐஏஎஸ் அதிகாரிகள் குறைவாக உள்ளது. பல மாநிலங்களில் பதவிகளை நிரப்ப முடியவில்லை.

இதன் விளைவாக, மாநிலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை, மையத்தில் விளைவை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கென்று IAS அதிகாரிகள் கிடையாது" 

லேட்டரல் நுழைவுத் திட்டம் சிவில் சேவைகளில் தேவையான  நிபுணத்துவத்தைக் கொண்டுவருவதற்கும், மத்திய அரசில்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு என இரட்டை நோக்கத்தை நிறைவேற்றும். மற்ற படி, எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை. 

Similar News