ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தி.மு.கவில் இணைந்ததாக பொய்யான செய்தி பரப்பிய "புதிய தலைமுறை"!

ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தி.மு.கவில் இணைந்ததாக பொய்யான செய்தி பரப்பிய "புதிய தலைமுறை"!

Update: 2021-01-18 08:11 GMT

ஊடகத்துறை என்பது நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு உள்ளது உள்ளபடியே எடுத்து கூற வேண்டிய பொறுப்பில் உள்ள ஓர் துறையாகும், அதில் சில ஊடகங்கள் தனது அரசியல் லாபத்திற்காக மட்டுமே இயங்குகின்றன எனபது அவ்வபோது நிரூபனமாகின்றன.

அந்த வகையில் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் அவர்கள் தி.மு.கவில் இணைந்ததாக பொய்யான தகவல்களை மக்கள் மத்தயில் அரசியல் காரணங்களுக்காக ஒளிபரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் தன் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதனால் அவரின் உண்மையான ரசிகர்கள் "எங்களுக்கு தலைவரின் உடல்நிலை முக்கியம், மாறாக அரசியல் இல்லை" என சிறிது ஏமாற்றத்துடன் தங்கள் மனதை தயார்படுத்திக்கொண்டனர். ஆனால் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவார் தாமும் தமிழகத்தில் மற்ற திராவிட கட்சிகளில் வலம் வரும் நிர்வாகிகள் போல் சம்பாதிக்கலாம், காரில் பந்தா'வாக வலம் வரலாம் என்று சிறு புத்தியுடன் யோசித்து காத்திருந்த சிலருக்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் இந்த முடிவு வாழ்நாள் ஏமாற்றத்தை அளித்தது.

காரணம் உண்மையான ரஜினி அவர்களின் ரசிகர்களுக்கு அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு, ஆனால் அரசியலை சம்பாதிக்க ஓர் வாய்ப்பாக பயன்படுத்த நினைத்த "அரசியல் வியாபாரிகளுக்கோ" திரு.ரஜினிகாந்த் அவர்களின் இந்த முடிவு ஓர் வாழ்நாள் ஏமாற்றமே! ஆகையினால் உண்மையான ரசிகர்கள் போர்வையில் வலம் வந்த சிலர் மாற்று கட்சிகளுக்கு தாவ துவங்கினர்.

இதனை தொடர்ந்து தி.மு.க'வில் சிலர் நேற்று இணைந்தனர். இதனால் மக்கள் மத்தியில் மொத்த ரஜினி ரசிகர்கள் கூட்டமும் அதிருப்தியில் உள்ளது போலவும், திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகைக்கு மாற்றாக தி.மு.க காண்பிக்கலாம் என்று மனக்கணக்கு போட்டு வந்ந சிலர் பொய்யான் தகவலை பரப்ப துவங்கினர்.

இந்த நிலையில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தி.மு.க'வில் இணைந்ததாக பொய்யான தகவலை நேற்று பரப்பியது. இதனை தொடர்ந்து உடனே கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து தனது முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி'யின் அரசியல் காரணமாக வெளிட்ட பொய்யான செய்தி மக்கள் மத்தியில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி'யின் உண்மையான முகத்தை வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.

Similar News