'கிசான் கிரெடிட் கார்டு' விவசாய கடனுக்கான வட்டி விகிதத்தை அரசு அதிகரித்துள்ளதா?  உண்மை என்ன?

'கிசான் கிரெடிட் கார்டு' விவசாய கடனுக்கான வட்டி விகிதத்தை அரசு அதிகரித்துள்ளதா?  உண்மை என்ன?

Update: 2021-01-21 17:16 GMT

வேளாண் துறையில் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளையில், அதை கெடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும் ஒரு சில ஊடக நிறுவனங்களும் போலி செய்திகளை பரப்பி வருகின்றன.

 அரசாங்கத்தின் மீது அவதூறு செய்யும் முயற்சியில் விவசாய கிரெடிட் கார்டு திட்டத்தின் கடன் தொடர்பாக போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். KCC மூலம் கடன் வாங்கி வருபவர்கள் தற்பொழுது கொடுக்கும் 7 சதவீத வட்டிக்கு பதிலாக ஆண்டுக்கு 12% வட்டி செலுத்த வேண்டும் என்று மோடி அரசு முடிவு செய்துள்ளதால் இந்திய விவசாயிகளுக்கு சிரமம் அதிகரித்தது என்ற தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது பொய்யானது என்று பத்திரிக்கை தகவல் பீயூரோ தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ஒரு ஹிந்தி பத்திரிக்கை கட்டுரையின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட PIB,  KCC கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரசு அதிகரித்துள்ளது என்று கூற்று போலியானது என தெரிவித்தது. 

கடன் வட்டி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெரிவித்தது.

 உண்மை என்னவென்றால் விவசாயிகள் எடுத்த கடனுக்கான வட்டி விகிதம் மாறாமல் உள்ளது.  KCC திட்டத்தின்கீழ் தாங்கள் வாங்கிய கடனுக்கு விவசாயிகள் ஆண்டுக்கு 7 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு அல்லது முந்தைய தொகையை திருப்பிச் செலுத்தவேண்டிய தேதி எது முன்பாக வருகிறதோ  அதற்குள் செலுத்த வேண்டும். 

உரிய தேதிக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால் அட்டையின் மீது வட்டி பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் உரிய தேதிக்குள் செலுத்த தவறினால் வட்டி அரை ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கும். இருப்பினும் கடன் வழங்கப்பட்ட பயிர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட அறுவடை மற்றும் மார்க்கெட் காலத்த்தைப் பொறுத்து திருப்பிச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கலாம்.

 கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால முறையில் கடன் வழங்கும் நோக்கில் 1998-ல் தொடங்கப்பட்டது. 

நரேந்திர மோடி கடந்த ஆண்டு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை விநியோகப்பதற்கான ஒரு இயக்கத்தை தொடங்கினார். 

இந்த முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு KCC வழங்கப்பட்டது. 

கிராமப்புறங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Similar News