மதுரையில் அமைச்சர் மீதான சம்பவம் காரணமாக பரவும் ஆடியோ - மாவட்ட தலைவர் கூறுவது என்ன?

மதுரையில் அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் அந்த வகையில் தற்போது பரவும் பொய்யான வீடியோ.

Update: 2022-08-27 12:49 GMT

மதுரை விமான நிலையத்தில் இராணுவத்தில் வீரம் மரணம் அடைந்த லட்சுமணன் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரைக்கு வந்திருந்தார். அவர் வேண்டுமென்று அங்கு அரசியல் செய்ய வேண்டும் என்று கூறுவதாக தற்போது ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆடியோ எந்த அளவிற்கு உண்மை தன்னை உடையது? என்பது இன்னும் உறுதியாக வில்லை. அதற்குள் இதனை யார் வேகமாக பரப்பி வருகிறார்? என்பதும் தெரியவில்லை.


மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் P.T. தியாகராஜர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு காரணமாக பா.ஜ.க மற்றும் தி.மு.கவிற்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் இது வேணும் என்று திட்டமிடப்பட்ட ஒரு சதி என்றும், அந்த மாதிரி சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் கூறுகையில், "என்னுடைய வாய்ஸில் அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. நானும், மாநில தலைவரும் பேசுவது போன்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நானும் அண்ணாமலை அவர்களும் ஒரே காரில் தான் மதுரைக்கு வந்து கொண்டிருந்தோம் அப்போது ஏன்? நாங்கள் போனில் பேசிக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்று அவர் கூறினார்.


இதன் பின்னர் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்த டாக்டர் சரவணன் நள்ளிரவில் அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும், விடியற்காலையில் அவர் பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட கூடுதல் பொறுப்பை ஏற்று வரும், புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் தற்போது பா.ஜ.க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்கள்.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News