2011-ம் ஆண்டே சோனியா காந்தியின் மருத்துவமனை செலவுக்காக, மக்கள் வரிப்பணம் ரூ.1880 கோடி செலவிடப்பட்டதா?

indian-govt-not-spent-1880-crore-for-sonia-treatment-in-2011

Update: 2022-01-25 03:43 GMT

காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில், சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை செலவிட்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

உண்மை சரிபார்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்தபோது, இது தனிநபர் செலவு செய்த விவகாரம், அதற்கும் அரசு இயந்திரத்திற்கும் தொடர்பில்லை என மத்திய தகவல் ஆணையாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.



இதன்படி, அமெரிக்கா சென்றபோது சோனியா காந்தி அவரது மருத்துவமனை செலவுக்காக ஒரு தொகையை செலவிட்டுள்ளார் என்று தெரியவருகிறது. ஆனால் அது அவரது சொந்தப் பணம் என்பது உறுதியாக தெரிய வரவில்லை. தனிநபரின் சொந்த செலவு என்பதால், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு தரப்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.. அதுபற்றிய விவரத்தை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது தெரிய வருகிறது. உண்மையாகவே சோனியா காந்தி அரசு பணத்தை செலவிட்டு இருந்தாலும், அப்போது காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பில் இருந்ததால், மத்திய அரசும் அதற்கு மறுப்பு தெரிவித்தே அறிக்கை வெளியிட்டுள்ளது.

முடிவு

ஆதாரங்களின் படி, சோனியா காந்தி செலவிட்டரூ.1880 கோடிமக்கள் வரிப்பணம் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பின்னணியில் நடந்த சம்பவங்கள் இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.



 






Tags:    

Similar News