ஈ. வெ. ராமசாமி நாயக்கரால் தமிழகத்தில் ஜாதி ஒழிந்ததா? வாட்ஸ்ஆப் வதந்தியை வைத்துக் கொண்டு கம்பு சுத்தும் சுரேஷ் சம்பந்தம்!
சுரேஷ் சம்பந்தம், சமீபத்தில் உறுதிபடுத்தப்படாத தகவல்களையும், பொய்களையும் பரப்பி பிடிபட்டார்.
'கிஸ்ஃப்ளோ' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற பிராண்ட் தூதருமான சுரேஷ் சம்பந்தம், சமீபத்தில் உறுதிபடுத்தப்படாத தகவல்களையும், பொய்களையும் பரப்பி பிடிபட்டார்.
அவருடைய டிவிட்டர் பக்கதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சாதிகளை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பெயருடன் ஜாதியை சேர்த்துக்கொள்வது போலவும், தமிழகத்தில் ஜாதியே இல்லாதது போலவும் ஒரு தரவை பகிர்ந்து, இது பெரியார் பூமி என பதிவிட்டுள்ளார். சமூக நீதி குறித்து வாயிற்கு வந்ததை எல்லாம் அடித்து விடும் சுரேஷ், ஒரு போலி செய்தியை நம்பி, டிவிட் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
அவர் பதிவிற்கு கீழேயே சம்பந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மாநிலத்தில் அப்படியொரு வழக்கம் கிடையாது. தமிழர்கள் புத்திசாலிகள் என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் இந்த தகவலை பதிவிட்டவர் வடிகட்டிய முட்டாள் என பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே ஒரே ஜாதிக்குள் திருமணம் நடக்கும் மாநிலங்களில் முன்னிலை வகிப்பது தமிழகம். அப்படி இருக்கும் போது , ஜாதிகளை எப்படி ஒழித்திருக்க முடியும்? ஜாதி ஒழிப்புக்கு பெரியார் பெயரை மேற்கோள் காட்டும் திராவிட கழக ஆதரவாளர்கள், அவர் எந்த ஜாதியை ஒழித்தார் என்பதை இதுவரை கூறியதில்லை.
பெரியாரே குடியரசு நாளிதழில் தன்னுடைய பெயரை ஈ. வெ . ராமசாமி நாயக்கர் என்றே பதிவிட்டுள்ளார் . அப்படி இருக்கையில் சுரேஷ் சம்பந்தம் போன்ற ஆட்கள், சமூக நீதிக்கு எதனை வைத்து பெரியார் பெயரை உள்ளே கொண்டு வருகின்றனர் என்பது தெரியவில்லை.