இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயற்சி: இந்திய கடற்படைத் தளபதி கருத்து!
பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) சீனா தனது வளத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், சீனாவின் எரிசக்தி ஆதாரங்கள், சந்தைகள் மற்றும் வளங்கள் என அனைத்தும் மேற்கில் அமைந்திருப்பதால் சீனாவின் கடற்படை IORல் வந்து செயல்பட்டு வருவது ஆச்சரியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் கடற்படை அனைத்து இடங்களிலும் தனது இருப்பை நிலைநாட்டும் நோக்கத்தை கொண்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் அமெரிக்க கடற்படை போர் கப்பல்களை நகலெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விமானந்தாங்கி போர்க்கப்பல் பிரிவை வளர்ப்பதற்கு நேரம் எடுக்கும் என்று மேலும் கரம்பீர் கூறினார்.
தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை குறித்து இந்தியா கண்காணித்து வருகிறது மற்றும் சீன கடற்படை இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் போர் தயார் நிலையில் உள்ள இந்திய போர்க்கப்பல்கள் எந்தவொரு அசாதாரணத்திற்கும் 24×7 மணிநேர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையிலாய் சீனர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்கனவே IOR ல் உள்ளனர் என்று கடல் விவகார நிபுணர் ரியர் அட்மிரல் சுதர்ஷன் ஸ்ரீகண்டே(ஓய்வு) கூறினார்.
"இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள் சமீபத்தில் கிழக்கு IORல் பலதரப்பு பயிற்சிகளை முடித்தன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாட் கடற்படைகளுடன் பிரான்சும் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 7 வரை தங்கள் கடற்படைகளில் இயங்கக்கூடிய தன்மையை மேம்படுத்த சிக்கலான கடல்சார் பயிற்சிகளை மேற்கொண்டன கரம்பீர் சிங் கூறினார். குவாட் நாடுகளின் கடற்படைகளுடன் இந்தியா அதிக அளவில் ஈடுபாடு மற்றும் இயங்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் சீனா மீண்டும் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது" என அவர் மேலும் கூறினார்.