சீரம் நிறுவன தடுப்பூசி குறித்து ஊடகங்கள் கிளப்பி விடும் வதந்தி! மக்களை திசை திருப்பும் அற்ப வேலையில் ஈடுபடும் அவலம்!
மே 25 வரை தனது அனைத்து உற்பத்தியையும் மத்திய அரசுக்கு வழங்குவதற்கு இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறதென்றும், இதன் காரணமாக மாநில அரசுகள் அந்நிறுவனத்திடம் இருந்து மேற்குறிப்பிட்ட தேதி வரை தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய முடியாதென்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமில்லாமல், எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாதவை ஆகும்.
நாடு தழுவிய தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மே 1 முதல் பரவலாக்கவும் விரிவுப்படுத்தவும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும். தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும் மாநிலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, 50 சதவீத தடுப்புமருந்துகள் இந்திய அரசு தவிர்த்த மற்ற பிரிவினருக்கு கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
புதன்கிழமை சீரம் நிறுவனம் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி உற்பத்தியை அளவிடுவதன் மூலம் வரையறுக்கப்பட்ட திறனை நிவர்த்தி செய்வோம். எங்கள் உற்பத்தியில் 50% இந்திய அரசுக்கும் மீதம் உள்ள 50% மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
45 வயதிற்கும் அதிகமான மக்களுக்கு நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய அரசு முழு நிதியுதவி அளிக்கும். 45 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கான தடுப்பூசி குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளட்டும். நுகர்வோர் பணம் செலுத்துதல் அல்லது மாநில அரசுகள் பொறுப்பேற்றல் என அதனை மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது.