ஆக்சிஜனை எடுத்து வரும் கப்பல்களுக்கான கட்டணம் ரத்து: அதிரடி முடிவை எடுத்த மத்திய அரசு!

Update: 2021-04-25 12:02 GMT

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யுமாறு அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், மருத்துவ தர ஆக்சிஜன், ஆக்சிஜன் டாங்கிகள், ஆக்சிஜன் பாட்டில்கள், போர்ட்டபிள் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு சரக்குகளை கையாள்வதில் அதிக முன்னுரிமை அளிக்க அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


நாட்டில் ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்களின் அதிகப்படியான தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் காமராஜர் போர்ட் லிமிடெட் உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும், மேஜர் போர்ட் டிரஸ்ட்கள் அதாவது கப்பல் தொடர்பான கட்டணங்கள் உட்பட விதிக்கப்படும் அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாங்கள் அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். முக்கிய துறைமுகங்கள் இன்று முதல் இந்த புதிய உத்தரவை செயல்படுத்தத் தொடங்கும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஒரு வேளை, கப்பல் மேற்கூறிய ஆக்ஸிஜன் தொடர்பான சரக்குகளுக்கு மேலதிகமாக மற்ற சரக்கு கொள்கலன்களை எடுத்துச் செல்கிறது எனில் விகித சார்பு அடிப்படையில் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல், துறைமுகத்தில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கு அல்லது கொள்கலன்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கப்பல்களுக்கு சரக்கு ஆக்சிஜன் தொடர்பானதாக வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

துறைமுக வாயிலில் கப்பல் வந்த நேரம் முதற்கொண்டு துறைமுக வாயிலிலிருந்து சரக்குகளை வெளியேற்றுவதற்காக துறைமுக அமைச்சகம் அத்தகைய கப்பல்கள், சரக்கு மற்றும் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட நேரம் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் கண்காணிக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

Similar News