இந்தியாவுக்கு ஆதரவாக எப்பொழுதும் துணை நிற்போம்: அமெரிக்கா வெளியுறவுத் துறை அறிவிப்பு!
இந்தியா தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் போராடி வருகிறது அந்தப் போராட்டத்தில் இந்தியாவிற்கு எப்பொழுதும் நாங்கள் பக்கபலமாக நிற்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு லட்சங்களைத் தாண்டி தற்போது அதிகம் உச்சம் எட்டி உள்ளது. கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால், நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தற்போது குரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாறி வருகிறது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்சு கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன.
அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியாவுக்கு ஆதரவாக எப்பொழுதும் துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதுபற்றி கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.