இந்தியாவிற்கு உலக நாடுகளின் உதவுவது ஏன்? குறித்து விளக்கிய மத்திய வெளியுறவு செயலாளர்!

Update: 2021-04-30 12:25 GMT

பல உலக நாடுகள் இன்று இந்தியாவிற்கு உதவி வருகிறது. ஏனென்றால் இந்தியா அப்போது செய்த உதவியின் அடிப்படையில், தற்போது நட்பு நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு மருத்துவ பொருட்களையும் உதவிகளையும் செய்து வருகிறது இன்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா என்று தெரிவித்தார்.

ஒரு ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட அவர் உலக நாடுகளின் உதவிகளைப் பற்றி கூறுகையில், "தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிட்டமால் மற்றும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து தயாரிப்புகளை இந்தியா அப்பொழுதும் வழங்கியதாகவும், அதன் காரணமாகத்தான் இப்போது இந்தியாவுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன" என்றும் அவர் கூறினார்.


இந்தியாவின் கொள்கையின்படி உலக நாடுகளின் உதவிகளை ஏற்பது ஏன் என்ற கேள்விக்கு அவர் தெளிவான ஒரு பதிலை அளித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும், "நாம் உதவி வழங்கியுள்ளோம். நமக்கு உதவி கிடைக்கிறது. இது ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகத்தைக் காட்டுகிறது. இது ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும் ஒரு உலகத்தைக் காட்டுகிறது. தொற்றுநோயை தனிப்பட்ட நாடுகளால் சமாளிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அதைக் கட்டுப்படுத்த ஒரு கூட்டு அணுகுமுறை தேவை" என்று ஷ்ரிங்க்லா கூறினார்.


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற அனைத்து முக்கிய நாடுகளும் உட்பட உலகெங்கிலும் சுமார் 40 நாடுகள் இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை சமாளிக்க உதவ மருத்துவ பொருட்கள் மற்றும் உதவிகளை அறிவித்துள்ளன.

இந்தியாவுக்கு உதவி அறிவித்த முன்னணி நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர்க், சிங்கப்பூர், போர்ச்சுகல், சுவீடன், நியூசிலாந்து, குவைத் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Similar News