இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை: இந்நிலையில் மத்திய அரசின் மற்றொரு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் ஆக்ஸிஜன் சப்ளை சிலிண்டர்களை தனி நபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்ய தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதாவது 2015-2020 வெளியுறவு வர்த்தகக் கொள்கையை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளதுடன், நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்து கொள்ள தற்போது அனுமதித்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் விலக்கு வகைகள் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இவற்றை பரிசுப் பொருட்களாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆக்சிஜன் செறிவூட்டிகளை அஞ்சல், கூரியர் அல்லது ஈ-காமர்ஸ் போர்ட்டல்கள் மூலமாகவும் நீங்கள் இதை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டல்களுக்கான விலக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 2021 ஜூலை 31 வரை அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகி உள்ள காரணத்தினால், அனைத்து வகையான பற்றாக்குறையும் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அவற்றை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று முயற்சியும் மத்திய அரசு தனிநபர்களின் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.