மக்கள் இந்த தவற்றை மட்டும் திரும்ப செய்யக்கூடாது: வலியுறுத்திய எய்ம்ஸ் இயக்குனர்!
தற்போது வேகமாக பரவி வரும் தொற்று நோய்கள் காரணமாக மக்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகிறார்கள். ஏன்? என்றால் கொரோனாவின் அறிகுறிகள் இருக்குமோ என்ற பயத்தில் பலரும் CT ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு விரைய ஆரம்பித்துள்ளனர். இது குறித்த எய்ட்ஸ் மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர். ரன்தீப் குலேரியா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.
அதாவது மக்கள் கொரோனாவின் லேசான அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக CT ஸ்கேன் எடுக்க விரைய வேண்டாம் என்று அவர் தற்பொழுது வலியுறுத்தியுள்ளார். தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, லேசான அறிகுறிகளுடன் கூட மக்கள் மீண்டும் மீண்டும் CT ஸ்கேன் பெற விரைகிறார்கள். இருப்பினும், எய்ம்ஸ் இயக்குநர் இதனால் பெரிய அளவில் எந்த நன்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர். குலேரியா கூறுகையில், "CTvஸ்கேன் மற்றும் பயோமார்க்ஸ் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்தால் CTஸ்கேன் செய்வதில் எந்த நன்மையும் இல்லை. ஒரு CTஸ்கேன் 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம்.
இது மிகவும் தீங்கு விளைவிக்கும். கேன்சர் வரக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன" என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் நோய் தொற்றிலிருந்து மே இரண்டாம் தேதி மீட்கப்பட்டவர்களில் சதவீதம் 78 ஆக இருந்தது. மே 3 ஆம் தேதி இது கிட்டத்தட்ட 82 வரை உயர்ந்தது. இவை ஆரம்பகால நன்மைகள், இதில் நாம் தவறாமல் வேலை செய்ய வேண்டும் என மேலும் கூறினார்.