இந்தியாவிற்கு வெளிநாடுகள் செய்யும் உதவிகளை இப்படி கூட சொல்லலாம் அல்லவா? மத்திய அமைச்சரின் விருப்பம்!
இந்தியாவில் தற்போது கொரோனா வின் கோரமுகத்தை காணமுடிகின்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக தான் இருந்துகொண்டு வருகிறது. மருத்துவமனைகளிலும் மற்றும் பல்வேறு தற்காலிக மருத்துவமனைகளிலும் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக இந்தியாவிற்கு பல நாடுகள் தங்களுடைய ஆதரவுகளையும் மற்றும் உதவிகளையும் செய்து வருகிறது.
மேலும் இதுகுறித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடம் கருத்து கேட்ட பொழுது அவர் கூறுகையில், "கொரோனா என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை என்று தெரிவித்ததோடு, இதற்காக சிக்கலில் உள்ள நாடுகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதை உதவி என்று குறிப்பிடப்படுவதை விட இந்தியாவுடனான நட்பு என்று குறிப்பிடும்படி" அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில் வெளிநாட்டிற்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை என்று வந்த பொழுது நாங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுக்கு மருந்துகளை கொடுத்தோம். சில நாடுகளுக்கு நாங்கள் தடுப்பூசிகளைக் கொடுத்தோம். தற்பொழுது இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதினால் வெளிநாடுகள் நமக்கு உதவி செய்வதை இந்தியாவுடனான நட்பு என்று சொல்ல நான் விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
எனவே இத்தகைய காலங்களில் சர்வதேச கூட்டாண்மை நடைமுறைக்கு வருவதாக, அதாவது ஒருவருக்கொருவர் தக்க சமயத்தில் தங்களுடைய நட்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.