இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்க இதை செய்ய வேண்டும்: இந்தியக் கடற்படைத் தளபதி கோரிக்கை!

Update: 2021-05-10 12:05 GMT

இந்தியாவின் எல்லைகளைக் பாதுகாக்கும் வண்ணம், இந்திய பசிபிக் கடலில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்காகவும் இந்திய கடற்படை மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை தற்போது முன்வைத்துள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது உள்ள கொரோனாவை சமாளிக்கும் விதமாக இந்திய கடற்படை சார்பாக போர்க்கப்பல்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. 


உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக,  இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் இதுகுறித்து கூறுகையில், "குஜராத் மாநிலம் கீவாடியாவில் முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, இந்திய பசிபிக் கடல் பகுதியில் இந்தியா சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கடற்படைக்கு 6 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் எடுத்து வரும் பணியில் போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. ராணுவ அமைச்சகத்துடன் ஆலோசிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினால் இந்திய – பசிபிக்கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றினால் இந்தியக் கடற்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் விதமாக அமையும் என்றும் அவர் கூறினார். 

Similar News