தடுப்பூசி போடுவதில் இனி இவர்களுக்கு தான் முன்னுரிமை: மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Update: 2021-05-12 12:46 GMT

தற்போது இந்தியாவில் கொரோனா அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஒரே தீர்வு என்று உணர்ந்துள்ளனர். மேலும் மத்திய அரசு தற்போது மாநிலங்களுக்கு கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளையும் விடுக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற வேண்டியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இந்த நோக்கத்திற்காக மத்திய சுகாதாரத்துறையில் இருந்து வழங்கப்பட்ட டோஸ்களில் குறைந்தது 70 சதவீதத்தை ஒதுக்குமாறு மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. 


தடுப்பூசி டோஸ்களை வீணாக்குவதைக் குறைக்க மாநிலங்களுக்கு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் தேசிய சராசரியை விட அதிகமான வீணான மாநில அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தடுத்த ஒதுக்கீட்டிலிருந்து சரிசெய்யப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மத்திய சுகாதாரத்துறை நடத்திய கூட்டத்தில் 2வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் ஏராளமான பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்ப மற்றும் தரவு மேலாண்மை தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் டாக்டர் R.S சர்மா ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் நிலையை ஆய்வு செய்ய மாநில அதிகாரிகளுடன் விவாதித்தபோது இதை வலியுறுத்தினர். 


Similar News