சீனாவை விட இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழுமாம்: சீன வல்லுனர்களின் கருத்து கணிப்பு!

Update: 2021-05-13 13:22 GMT

தற்பொழுது சீன மக்கள்தொகை வல்லுனர்களின் கருத்துப்படி இந்த விஷயத்தில் சீனாவைவிட இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் முந்தி விடக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 2027 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இந்தியா உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். சீனா கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு விகிதத்தில் நிலையான வீழ்ச்சியை பதிவு செய்து வருவது பற்றி மேலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது சீன தான் இருந்து வருகிறது. 


ஆனால் இன்னும் 2050க்கு இடையில் இந்தியா கிட்டத்தட்ட 273 மில்லியன் மக்களை அதன் மக்கள்தொகையில் புதிதாக சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2021 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1.37 பில்லியன், சீனா 1.43 பில்லியன் மக்கள் தொகை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.


நேற்று சீனா வெளியிட்ட ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள் தொகை மிக மெதுவான வேகத்தில் வளர்ந்துள்ளது. மேலும் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் எதிர்கால பொருளாதார பார்வையை பாதிக்கும். 2027 க்கு முன்னர் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தக்கூடும் என்று சீனாவின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளேடு தன்னுடைய கருத்து கணிப்பை பதிவு செய்துள்ளது.  

Similar News