கொரோனா பாதிக்கப்பட்டவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் காலஅளவு: தெளிவாக விளக்கிய மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நாம் பார்க்க முடிகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் உடனே தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் கொரோனா தடுப்பூசியை, தொற்றிலிருந்து மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவில் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தகவல் ஒன்றை இன்று தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தகைய கொரோனா வைரஸிற்கு எதிராக தற்பொழுது எடுத்து கொள்ளப்படும் தடுப்பூசிகளை எடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு விருப்பம் வழங்கப்படலாம் என்றும், அதன்பிறகு பாலூட்டும் பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும் தடுப்பூசி போடலாம் என்றும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது, கோவிஷீல்ட்டின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 4 முதல் 8 வாரங்கள் ஆகும். இருப்பினும், கோவாக்சினுக்கு அளவு இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த குழு பரிந்துரைத்தது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் கொரோனாவுக்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவுக்கு அனுப்பப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் V.K.பால் தலைமையிலான தகுழு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.