கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இந்த வயதை கடந்தவர்கள் தான்: சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் வேகமாக மற்றும் வீரியமாகவும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல மக்கள் தங்களுடைய உயிரை இழந்துள்ளனர். ஆகவே இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி தற்போது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில் ஒரு அதிர்ச்சி முடிவு வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர்களில் 77 சதவீதத்துக்கும் மேலானோர், சுமார் 50 வயதைக் கடந்தவர்கள் என்று தெரியப் படுத்தியுள்ளது.
இதற்காக குருகிராம் நகரின் சுகாதாரத் துறையின் மேற்கொண்ட ஆய்வில், ஏப்ரல் 1 முதல் மே 10 வரை, மாவட்டத்தில் ஆபத்தான கொரோனா வைரஸால் உயிரிழந்த நோயாளிகளில் 77 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழந்த 23 சதவீதம் நோயாளிகள் மட்டுமே 50 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
குருகிராமில் இதுவரை நகரின் தினசரி சுகாதார அறிக்கையின் படி, ஏப்ரல் 1 முதல் மே 10 வரை, மாவட்டத்தில் கொரோனா காரணமாக 235 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 181 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த வைரஸ் பெண்களை விட அதிகமான ஆண்களின் உயிரைக் கொன்றது என்பதையும் இந்த எண்ணிக்கை காட்டுகிறது. ஏப்ரல் 1 முதல் மே 10 வரை கொரோனா வைரஸால் இறந்த 235 நோயாளிகளில் 82 பெண்கள், 153 ஆண்கள் அடங்குவார்கள்.
குருகிராமின் தலைமை மருத்துவ அதிகாரி வீரேந்தர் யாதவ் இதுபற்றி கூறுகையில், "கொரோனா தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையின் சுமார் 138 குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரத் துறையின் அர்ப்பணிப்புக் குழு வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் நிலைமைகளைக் கண்காணித்து வருகிறது" என்று கூறினார்.