தடுப்பூசி செலுத்துவதில் மற்றொரு மைல்கல்லை பதித்த இரண்டாவது நாடு இந்தியா!

Update: 2021-05-27 12:14 GMT

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள 2வது அலைகளை பல்வேறு உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்தமாக 20 கோடி மக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்திய இரண்டாவது மிகப்பெரிய நாடாக தற்பொழுது இந்தியா திகழ்கிறது.

60 வயதிற்கு மேற்பட்ட 42 சதவீத மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வெறும் 130 நாட்களில் இந்தியா 20 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு மைல்கல்லை எட்டியுள்ளது. 20 கோடி டோஸை எட்ட அமெரிக்கா 124 நாட்கள் எடுத்தது என்பதையும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், டெல்லியில் தனியார் சுகாதார மையம் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. சிலருக்கு பகுதி அல்லது முழுமையான தடுப்பூசி போட்ட பிறகும் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

ஆனால் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் மக்கள் வைரஸுக்கு உயிரிழந்த சம்பவங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனைகளின் கூற்றுப்படி, கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி இயக்கத்தின் முதல் 100 நாட்களில், கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த மருத்துவமனையில் பணிபுரியும் 69 சுகாதார ஊழியர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே புதிய வகை நோய் தொற்றுகளில் இருந்து உங்களையும் பாதுகாத்துக்கொள்ள, தகுந்தமுறையில் தடுப்பூசிகளை எடுத்து கொள்ள வேண்டுமென்றும், மேலும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

Similar News