ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

Update: 2021-05-28 12:14 GMT

இந்தியாவில் தற்பொழுது தடுப்பூசி போடுவதற்கு பல மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், தங்களுடைய குடும்பங்களை தற்காத்துக் கொள்வதற்கும் பல மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு வருகிறார்கள். எனவே அதிகரிக்கும் தேவைக்கு ஏற்றபடி தடுப்பூசிகள் எண்ணிக்கையும் இருக்க வேண்டும் என்பதற்காக, வேறு நாட்டைச் சேர்ந்த தடுப்பூசிகளும் தற்போது இந்திய அரசாங்கம் அனுமதி கொடுப்பதற்கு பரிசீலித்து வருகிறது. 


அந்த வகையில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுக்கப் பட்டுள்ளது. தற்போது முடிவுசெய்துள்ளது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசரின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், மக்களின் நலன் குறித்தும், அதன் தகுதி குறித்தும் ஒரு முடிவை மத்திய அரசு விரைவில் எடுக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் V.K.பால் கூறினார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் நடந்து வருகிறது. அவர்கள் இந்தியாவுக்கு வந்து இந்தியாவில் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் கூறினார்.


இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை 5 கோடி டோஸ் இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ள ஃபைசர், அனுமதி கோரியுள்ளது. நிறுவனம் அரசாங்கத்துடன் இதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன் கொரோனா தடுப்பூசிக்கு விரைவான ஒப்புதல் கோரி, அமெரிக்க மருந்து நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம், இந்தியாவில் நிலவும் கொரோனா மாறுபாட்டிற்கு எதிராகவும், இந்திய மக்களிடம் தங்கள் தடுப்பூசி அதிக செயல்திறனை காட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தவிர, இது 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்றது மற்றும் 2-8 டிகிரியில் ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Similar News