கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்: பின்பற்றும் லட்சத்தீவு நிர்வாகம்!

Update: 2021-06-01 12:24 GMT

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக மாநிலங்களில் மட்டுமல்லாது யூனியன் பிரதேசங்களில் எங்கும் கொரோனா தன்னுடைய கோர முகத்தைக் காட்டிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லட்சத் தீவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை அந்த யூனியன் பிரதேச நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, மாநிலங்களில் குறுநகை கட்டுப்படுத்த ஊரடங்கு விதித்ததைத் தொடர்ந்து அங்கும் இன்று முதல் முழு ஊரடங்கை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதாக லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்தது. அங்கு முழு ஊரடங்கு முதலில் மே24 முதல் ஒரு வாரத்திற்கு அறிவிக்கப்பட்டது. 


மேலும் இதுகுறித்து லட்சத்தீவு மாவட்ட ஆட்சியர் S.அஸ்கர் அலி கூறுகையில், "கில்டன், சேத்லாத், பித்ரா, காட்மத் மற்றும் அகட்டி உள்ளிட்ட ஐந்து தீவுகளில் இரவு ஊரடங்கு உத்தரவை மட்டும் அறிவித்து இருந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துதல், மற்றும் சமீபத்திய கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக கடைபிடிப்பது போன்ற மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைப்படி மேற்கொள்ளப்படுகிறது" என்று கூறினார்.


அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2015 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்படி இந்த ஊரடங்கு மீறுபவர்கள் இன் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் லட்சத்தீவு நிர்வாகம் கூறியுள்ளது. லட்சத்தீவில் 2,006 பேர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Similar News