கொரோனா தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - உத்திர பிரதேசத்தில் அதிரடி!

Update: 2021-06-03 12:23 GMT

நாடு முழுக்க கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநிலங்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆனால் பொதுமக்கள் இன்னும் தடுப்பூசி போடுவதற்கு சிறிதளவு அச்சத்தை காட்டிதான் வருகிறார்கள். எனவே மக்களுக்கு முன்னுதாரணமாக அரசு ஊழியர்கள் இதில் அதிகளவில் செயல்படுத்துவதன் மூலமாக, குறிப்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதன் மூலமாக மக்களுக்கு இடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உத்தர பிரதேசத்தில் உள்ள மாநில நிர்வாகக் நன்கு அறிந்துள்ளது. அந்த வகையில் தற்போது அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்வது உறுதிப்படுத்தும் விதமாக ஒரு கட்டளையையும் விதித்துள்ளது. 


கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என என்ற அதிரடி முடிவை உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் சந்திர விஜய் சிங்தான் எடுத்துள்ளார். எனவே அந்த மாவட்டத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகுதான் அவர்களுக்கு அந்த மாதத்திற்குரிய சம்பளம் வழங்கப்படும் என்று அந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் சந்திர விஜய் சிங் இந்த முடிவை ஒரு வாய்வழி வார்த்தை மூலமாக மட்டும்தான் கூறியுள்ளார். எனவே அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


மேலும் இதுபற்றி மாவட்ட தலைமை வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், "தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது என கலெக்டர் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மீது அந்தந்த துறை நடவடிக்கையை தொடங்கும். அத்துடன், மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். எனவே சம்பளம் கிடைக்காது என்ற பயத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார். மேலும் ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.

Similar News