'மம்தா பானர்ஜி ஏன் மெளனம் காக்கிறார்?' : தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து மேற்கு வங்க ஆளுநர்!
மேற்கு வங்கத்தில் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அந்த கட்சி தொண்டர்கள் பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடம் வன்முறையில் ஈடுபட்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இது குறித்து அந்த மாநிலத்தின் ஆளுநர், "மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைால் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், வடக்கு வங்காளத்தில் ஒருவார கால பயணத்தை நேற்று தொடங்கினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது "மேற்கு வங்கத்தில் மே 2 ஆம் தேதிக்கு பிறகு ஏற்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் நான் கவலை அடைந்துள்ளேன். இந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் மாநிலத்தில் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்த வகையான வன்முறை ஜனநாயக அமைப்பில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை நடந்து பல வாரங்களுக்கு பிறகும், வன்முறை தொடர்பான புகார்களை மாநில அரசு நிராகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஏன் மெளனம் காக்கிறார்? தீக்கோழி போன்ற மாநில அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல." என்று அவர் பேசியுள்ளார்.