தடுப்பூசி முன்பதிவுக்கு இந்தியா பயன்படுத்தும் தொழில்நுட்பம்: ஆர்வம் காட்டும் உலக நாடுகள் - ஏன்?
தற்பொழுது இந்தியாவில் தான் அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப் படுகின்றன. மேலும் அமெரிக்காவை மிஞ்சி நாம்தான் தடுப்பூசி செலுத்து நாடுகளின் முன்னிலையில் இருந்து வருகிறோம். அதற்கான காரணம் என்ன என்று ஆராய்கையில் நம்முடைய கோ-வின் வலைதளம் தான். ஆமாம் கோ-வின் உன்னுடைய வலைதளம் மூலம் ஒருவர் தன்னுடைய தகவல்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியும். எனவே தடுப்பூசி செலுத்தும் பொழுது அவர் எப்பொழுது செலுத்திக் கொண்டார்? மேலும் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி எப்பொழுது செலுத்த வேண்டும்? என்பது போன்ற பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
எனவே கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு பயன்படுத்தப்படும் கோ–வின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(CII) ஏற்பாடு செய்திருந்த பொது சுகாதாரத்திற்கான இரண்டாவது மாநாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் R.S.சர்மா அவர்கள் கூறுகையில், "கோ–வின் செயலி உருவாக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே 30 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசிக்காக அதில் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.
குடிமக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக மாவட்ட அளவில் துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை பெற முடியும். இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு தேதியில் மாற்றம் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் நடைமுறையை மிக எளிதாக மேற்கொள்ளலாம் என தொடர்ந்து கூறி வருகிறோம். முன்பதிவு செய்யாமலேயே தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் முடியும். 80 % மக்கள் அப்படி தான் போட்டுக் கொள்கின்றனர். அவர்களை பற்றிய விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த கோ–வின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த கனடா, மெக்சிகோ, பெரு, உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகள் ஆர்வமாக உள்ளன. அவர்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாக அளித்திட மத்திய அரசு தயாராக உள்ளதாகவும்" அவர் கூறியுள்ளார். இந்தியாவிடம் உள்ள இந்த தொழில்நுட்பம் மிகவும் எளிதாக அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் இதனால் தான் இதை உலக நாடுகள் இந்த தொழில்நுட்பத்திற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.