விரைவில் இந்தியாவில் அனுமதிக்கப்பட உள்ள ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி?

Update: 2021-06-30 12:30 GMT

தற்பொழுது உள்ள கடினமான சூழ்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தியது.


அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் தடுப்பூசியை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்து, பல்வேறு வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியை இந்தியாவிலும் அனுமதிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


இந்த தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது மூலமாக அனைத்து மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஜான்சன் தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவுக்கு விரைந்து வழங்குவது குறித்து தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது 

Similar News