விமானப் படையில் நடந்த தாக்குதலால் ரஜவுரி மாவட்டத்தில் ட்ரோன்களுக்கு தடை!

Update: 2021-07-01 13:01 GMT

சில தினங்களுக்கு முன்பு ஜம்மு விமானப் படை தளத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட 'ட்ரோன்' மூலம் பயங்காரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பில் இருந்த இரண்டு அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு அமைந்துள்ள ஒரு மாடி கட்டடத்தின் மேல்தள பகுதியில் "ட்ரோன்" வெடித்து சிதறியதில் கட்டடத்தின் கூரை பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜவுரியில் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. .


ஜம்மு விமானப் படை நிலையத்தில் ட்ரோன்கள் மூலம்  நடந்த வெடிகுண்டு தாக்குதலை, தொடர்ந்து இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்கள் ஊடுருவி வந்தது. அவ்வாறு வந்த பாக்கிஸ்தான் ட்ரோன் ஒன்றை  அங்கு இருந்த அதிகாரிகள் தாக்கினர், மேலும் அந்த ட்ரோனை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் விழிப்போடு கண்காணித்து வருகின்றனர். தாக்குதல் மட்டுமின்றி, இந்தியப் பகுதிக்குள் ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்தவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் நிலையில், காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜவுரியில் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எனவே அந்த மாவட்டத்தில் இந்த தடை விதிக்கப்பட்டதால், இனிமேல் ட்ரோன்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவை இன்று வெளியிட்டுள்ள ராஜேஷ்குமார் சவான், ட்ரோன்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை வைத்திருப்போர் உடனடியாக அவற்றை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News