இந்தியா: வீரியத்தை குறைத்து கொண்ட கொரோனா, பாதிப்பு எண்ணிக்கை இறங்குமுகம்!
உலகில் தன்னுடைய ஆதிக்கத்தின் முழுமையாக நிலைநிறுத்திய கொரோனா தற்போது தன்னுடைய வீரியத்தை குறைக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு நாடுகளில் மக்கள் மெல்ல மெல்ல தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் குறிப்பாக 60 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளுக்கு முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
எனவே பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இறங்குமுகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டவர்கள் எண்ணிக்கை 2.98 கோடியை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்தது. ஒரேநாளில் 47,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்தை தாண்டியது. 4.59 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதித்த நபர்கள் தற்பொழுது க்கு அதிகமான அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் தற்காலிக மருத்துவமனையில் தற்போது காலி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் ஒரே விஷயமாக, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.