கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதன் வேகம் குறையாது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனவைரஸ் தன்னுடைய பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக பல தரப்புகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் வேகத்தை குறைக்காது என்று விஞ்ஞானிகள் தற்போது புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அதன் பரவல் வேகம், 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால்,முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு நாளில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வைரஸின் பரவல் வேகம் குறையாதது என்று ஒரு விஷயம் விஞ்ஞானிகளை தற்போது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் மையத்தின் சீதாபரா சின்ஹா கூறுகையில், "வைரஸ் பரவல் குறித்து கணித ரீதியில் ஆய்வு செய்து வருகிறோம். மே 15 - ஜூன் 20 கால கட்டத்தில் வைரஸ் பரவல் வேகம் 0.78% ஆக இருந்தது. ஆனால், ஜூன் 20 - ஜூலை 7ம் தேதி காலத்தில் இது 0.88 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதாவது வைரசால் பாதிக்கப்பட்ட 100 பேர் மேலும் 88 பேருக்கு வைரசை பரப்புகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அதனால், மக்கள் அதிகளவில் கூட்டமாக செல்வதை துவங்கி விட்டனர். எனவே இவற்றுக்கு ஒரே தீர்வாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், தடுப்பூசி போடுவது போன்றவற்றை கடைப்பிடிப்பதன் வாயிலாக பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.
கணக்கின்படி, 1 சதவீதத்துக்கும் அதிகமாக பரவல் இருந்தால் அதுவும் மிகவும் ஆபத்து ஆகும். நாட்டின் மொத்த சராசரி, 1க்கும் கீழே உள்ளது. ஆனால் கடந்த, 15 நாட்களில் அது உயர்ந்துள்ளது, நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும். மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டுமே பரவல் வேகம், 1 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக தகவல் கூறுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.