கொரோனா பரவலை குறைக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வல்லுநர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் மக்கள் மெல்ல மெல்ல தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். குறிப்பாக வெளி இடங்களுக்கு செல்கையில் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது போன்ற பல்வேறு அறிவுரைகள் மக்களுக்கு கூறப்பட்டுள்ளன. ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் இத்தகைய விஷயங்களை மிகவும் அலட்சியமாக கையாளுகிறார்கள் என்று வல்லுநர்கள் தங்களுடைய கவலை தற்போது தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் தற்போது தான் இரண்டாவது அலையின் வேகம் குறைய தொடங்கி இருக்கிறது. மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் கையாளும் பொழுது தான் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்கவும் முடியும். எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். நோய் தொற்றிலிருந்து காக்கும் தடுப்பூசியை 36% மக்கள் மட்டும் செலுத்தியுள்ளதால், கரோனா 3-வது அலை நிச்சயம் வரக்கூடும் எனப் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளது.
கொரோனா 3வது அலையை வராமல் தடுக்க மக்கள் முறையாக முகக்கவசத்தை அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, கைகளைக் கழுவுவது, தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் தள்ளிப்போடலாம் என்றும் மத்திய அரசும் அடிக்கடி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் கூட்டமாகச் செல்லுதல், முகக்கவசம் சரியாக அணியாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை மீறுகிறார்கள். இதனால் 3-வது அலை உருவாகும் சூழலுக்கு வழிவகுக்கிறார்கள் என்றும் வல்லுனர்கள் தற்பொழுது எச்சரித்துள்ளனர்.