சிடிஎஸ் ஜென்ரல் 'பிபின் ராவத்' மற்றும் மதுலிகாவின் அஸ்தியை பெற்றுக்கொண்ட மகள்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கமாண்டோக்கள் உட்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் கேப்டன் விமானி மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Update: 2021-12-11 05:24 GMT

இதனிடையே முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தியை டெல்லி கண்டோன்மென்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் அவர்களின் மகள்களான கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அஸ்தி கரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News