வேகமெடுக்கும் ஒமைக்ரான்: இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்!

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைத்து வந்தது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது மட்டுமின்றி பல கோடி பேர் சிகிச்சை பெற்று மீண்டும் உயிர் பிழைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Update: 2021-12-22 07:35 GMT

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைத்து வந்தது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது மட்டுமின்றி பல கோடி பேர் சிகிச்சை பெற்று மீண்டும் உயிர் பிழைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகளவில் தடுப்பூசி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக உயிரிழப்பும் மற்றும் நோயின் பரவலின் வேகமும் குறைந்தது. இதனால் பல நாடுகள் பெருமூச்சி விட்டது. தற்போது மீண்டும் உலக மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. முதன் முலாக தென்னாப்பிரிக்காவில் பரவிய வைரஸ் இந்தியாவில் 213 பேருக்கு பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளிட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில அரசுக்குள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பத்து சதவீதம் இருந்தாலே அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். மேலும், டெல்டா வைரஸை விட தற்போது கொரோனாவை விட கூடுதலாக 3 மடங்கு வேகமாக பரவும் வகையில் ஒமைக்ரான் தொற்று இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாநில அரசுகள் வேண்டும் என்றால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் தயங்கக்கூடாது. மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News