அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் எப்போது? புதிய தகவல் வெளியீடு!
அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய கட்டுமான பணிகள் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று அக்கோயிலின் அறக்கட்டளை கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினரான அனில் மிஸ்ரா கூறியதாவது: இந்து சமய நாட்காட்டியின்படி ஜூன் 1ம் தேதி மிகவும் புனிதமான தேதி என்பதால் அன்றை நாளில் மிக முக்கிய கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும்.
இதனிடையே 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கருவறையில் குழந்தை ராமர் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதிக்கும் வகையில் இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Source: Polimer
Image Courtesy: The Financial Express