'அதிகளவு கார்பன் கழிவுகளுக்கு வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பு' - 'மண் வளம் காப்போம்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

Update: 2022-06-05 08:12 GMT

அதிகளவு கார்பன் கழிவுகளுக்கு வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று 'மண் வளம் காப்போம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறினார்.


மண் வளம் காப்போம் என்று ஈசா யோகா நிறுவனர் சத்குரு பல்வேறு நாடுகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பிய அவர் வடமாநிலங்களில் இருந்து தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார். இதற்காக பல மாநில முதலமைச்சர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதன் அடுத்த கட்டமாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ''பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிக குறைவு. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியாவின் திட்டங்கள் பல இருக்கின்றன. அதிகளவு கார்பன் கழிவுகளுக்கு வளர்ந்த நாடுகள் தான் பொறுப்பு'' என்றார். 

Source: News 7 Tamil

Tags:    

Similar News